பொறியாளர், கணக்காளர் வேலைக்கு டிசிஐஎல்லில் 2லட்சம் வரை சம்பளம்!

வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க... பொறியாளர், கணக்காளர் பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Accounts Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 87,000
தகுதி: CA, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Assistant Engineer (Finance) - 03
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: CA,CMA முடித்துசம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant General Manager (Finance) - 02
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00000
தகுதி: CA,CMA முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.
விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The General Manager(HR), Telecomminications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110 048. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2019