ஜெயலலிதா மார்பை பிளந்து இதயத்திற்கு மசாஜ்! அதிர வைக்கும் அப்பலோ வாக்குமூலம்!

ஜெயலலிதாவின் மார்பை பிளந்து இதயத்திற்கு மசாஜ் செய்ததாக அப்பலோ மருத்துவமனை அளித்துள்ள வாக்குமூலம் அனைத்து தரப்பினரையும் அதிர வைத்துள்ளது.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவரும் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்திய குழுவில் இடம்பெற்றிருந்தவருமான  மீனல் எம்.போரா இன்று ஆஜராகி விளக்கமளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் விவரம் பின்வருமாறு:-

     2016ம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் கண்களில் அசைவு தெரிந்தது. ஜெயலலிதா  மெதுவாக மூச்சு விடவும் தொடங்கினார். மறுநாள் அதாவது 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ஜெயலலிதாவின் ரத்த ஓட்டம் ஓரளவுக்கு சீரானது. பின்னர் ஜெயலலிதாவின் இதயம் தானாக செயல்பட தொடங்கியது.

  இவ்வாறு மருத்துவர் போரா வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட விசாரணை ஆணைய வழக்கறிஞர், இதற்கு முன் ஆஜரான மருத்துவர்கள் அனைவரும் எக்மோ கருவி பொருத்திய பின்பு ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு இல்லை என சொல்லியிருந்தார்கள் ? நீங்கள் அவர்கள் கூறியதற்கு முரணாக கூறுவது ஏன்? என எழுப்பினர். இதற்கு மருத்துவர் போரா தான் கூறுவது தான் உண்மை என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து இன்று இரண்டாவதாக ஆஜரான தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் காமேஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர்களுக்கு நான் உட்பட 4 டெக்னீசியன்கள் உதவியாக இருந்தோம். ஒரு கடத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனால் ஜெயலலிதாவின் மார்பை பிளந்து இதயத்தை செயல்பட வைக்கும் முயற்சி நடைபெற்றது.

   இதற்காக ஜெயலலிதாவின் மார்பு பிளக்கப்பட்ட நிலையில் அவரது இதயத்திற்கு மசாஜ் ( பம்பிங் ) செய்யும் படி மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். இதன் அடிப்படையில் நான் உள்ளிட்ட என்னுடன் இருந்த டெக்னீசியன்கள் ஜெயலலிதாவின் இதயத்திற்கு மசாஜ் செய்தோம். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் காமேஷ் கூறியுள்ளார்.

    ஜெயலலிதாவின் இதயத்தை மசாஜ் செய்யும்படு மருத்துவர்கள், ஊழியர்களை அறிவுறுத்தியதும், அவர்கள் மசாஜ் செய்ததாகவும் அளித்த வாக்குமூலம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.