அப்பலோ ஆப்பரேசன் தியேட்டரில் வாய்வழி புணர்ச்சி! பெண் நோயாளிக்கு ஏற்பட்ட கொடூரம்! டெக்னீசியன் கைது!

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு அப்பலோ மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம் கேட்போரை அதிர வைப்பதாக இருந்தது.


மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காலில் நடக்க முடியாத அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் சென்ற போது சென்னை பெருங்குடி அப்பலோவிற்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதனை அடுத்து சென்னை வந்த அப்பெண்ணுக்கு பெருங்குடி அப்பலோவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்பரேசன் தியேட்டரில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் இருந்துள்ளனர். காலில் ஆப்பரேசன் செய்யும் போது அதனை பெண் பார்க்க கூடாது என்பதற்காக வயிற்றுக்கு மேல் பகுதி இருக்கும் இடத்தை திரை சீலை போட்டு டாக்டர்கள் மறைத்துள்ளனர்.

மேலும் அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பெண் பாதி மயக்கம் அடைந்துள்ளார். மேலும் அவருக்கு சுவாசக் கருவியும் பொறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சையை தொடங்கிய நிலையில் தான் அந்த பெண்ணுக்கு அந்த விபரீதமும் தொடங்கியுள்ளது.

ஆப்பரேசன் தியேட்டரில் இருந்த உதவியாளர் டில்லி பாபு என்பவன் அந்த பெண் மயங்கியிருப்பதாக நினைத்து தன்னுடைய லீலைகளை தொடங்கியுள்ளான். முதலில் அந்த பெண்ணின் அங்கங்களை தொட்டு சுய இன்பம் கண்ட அவன் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வாயையும் தவறாக பயன்படுத்தியுள்ளான்.

அதாவது அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு டில்லி பாபு ஆப்பரேசன் தியேட்டரில் இருந்த பெண்ணிடம் வரம்பு மீறியுள்ளான். பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணால் அவனை தடுக்க முடியவில்லை.ஒரு கட்டத்தில் தனது தேவையை முடித்துக் கொண்டு அந்த கொடூரன் அங்கிருந்து புறப்பட்டுள்ளான். ஆப்பரேசன் முடிந்து சுயநினைவுக்கு திரும்பிய பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த பெண்ணை மருத்துவர்களும்அப்பலோ நிர்வாகமும் அலட்சியப்படுத்தியது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை புகாராக கொடுத்துள்ளார். இதனை அடுத்தே டில்லி பாபு கைது செய்யப்பட்டுள்ளான்.

விசாரணையில் டில்லி பாபு தான் ஆப்பரேசன் செய்து கொண்டபோது தன்னை வாய்வழி புணர்ச்சிக்கு ஆளாக்கியதை அந்த பெண் கண்ணீருடன் கூறியுள்ளார்.  மேலும் தனது வாய், முகத்தில் இருந்த டில்லி பாபுவின் விந்துவை நர்ஸ்கள் சுத்தம் செய்த கொடூரத்தையும் கதறியபடியே அந்த பெண் கூறியுள்ளார்.