தினகரன் கட்சியில் அனுராதாவும் ஜனாவும் வைச்சதுதான் சட்டம்! குற்றம் சாட்டும் தேனி கர்ணன்!

தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்பட்ட முதல் முக்கியமான நபர் என்றால் அவர் தேனி கர்ணன்.


 தினகரன் கட்சியில் அடிமைகள் மட்டும்தான் இருக்க முடியும் என்று இப்போது மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.தினகரன் கட்சியில் இருந்து ஏன் வரிசையாக நிர்வாகிகள் வெளியே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். தினகரனுக்கு கட்சி நடத்தும் அனுபவம் கிடையாது என்பதால் யாரை எப்படி நடத்துவது என்று தெரியாது.

இப்போதும் தினகரன் கட்சியை அவரது மனைவி அனுராதாவும், அவரது உதவியாளர் ஜனாவும்தான் நடத்தி வருகிறார்கள். யார், யாரை பதவியில் அமர்த்தவேண்டும், யாரை தூக்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் இருவரும்தான் முடிவு செய்கிறார்கள். அதில் ரப்பர் ஸ்டாம்ப் போன்று தினகரன் கையெழுத்துப் போடுகிறார் அவ்வளவுதான்.

இனியும் தினகரனுடன் யாரும் இருக்க முடியாது. சசிகலா மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே அவருடன் இருக்கிறார்கள். விரைவில் ஒவ்வொருவராக வெளியே வந்துவிடுவார்கள். தினகரனும் காணமால் போய்விடுவார் என்று தெரிவிக்கிறார்.

என்னமோ போங்க.