பட்டப்பகலில் அனைவர் முன்னிலையிலும் இடித்து தரைமக்கமாக்கப்ட்ட துர்கை அம்மன் கோவில்! அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்!

குண்டூர்: ஆந்திராவில் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.


குண்டூரில் உள்ள கொல்லி சாரதா மார்க்கெட் பகுதியில் கனகா துர்கா கோயில் இருந்துள்ளது. அதனை  நகராட்சி விரிவாக்கப் பணிகளுக்காக, குண்டூர் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியுள்ளது. கோயிலை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நந்திவேலுகு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, கோயிலை இடிக்க நேரிட்டதாக, குண்டூர் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  

அதேசமயம், 30 ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வந்த கோயிலை இடித்து தள்ளியது ஏற்புடையதல்ல என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய எச்சரிக்கை மற்றும் கால அவகாசம் தராமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, குண்டூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்க அங்கே கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.