ஜெ சமாதி விசிட்! மதுசூதனன் சந்திப்பு! பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் குறி!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தான் இனி நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல் முடிவும் இருக்கும் என்று பன்னீர்செல்வம் தீர்க்கமாக நம்புகிறார். என்னதான் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்தாலும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்று ஓபிஎஸ் நினைக்கிறார். இதனால் கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஓ பன்னீர்செல்வம் வியூகம் வகுத்து உள்ளதாக கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி அரசை திறம்பட காப்பாற்றினாலும் கூட கட்சியை அவரால் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் ஒரு பேச்சு அதிமுகவிற்கு உள்ளது. மாவட்டச் செயலாளர் என்கிறார் அதே தொனியில் தான் எடப்பாடி தற்போதும் நடந்து கொள்வதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளை கருதுகின்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமி யை பெரும்பாலான தொழிலதிபர்கள் விரும்பவில்லை என்றும் எனவே முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் காய் நகர்த்துவது கூறுகிறார்கள்.

இதனை மனதில் கொண்டு தான் சரியான தருணத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக வே திடீரென இன்று காலை ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ். பிறகு அதிமுகவில் அவைத் தலைவர் ஆன மதுசூதனனை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். காரியம் எதுவும் இல்லாமல் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி கோ மதுசூதனன் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர்.

மதுசூதனன் அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கிறார். அக்கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் கூட மதுசூதனனுக்கு தான் உண்டு. எனவே மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் வியூகம் வகுத்து உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.