நிறை மாத கர்ப்பிணி! திடீர் பிரசவ வலி! உதவிக்கு யாருமில்லை! தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற இளம் பெண்!

உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா அருகே பாப்பநாடுபேட்டையை சேர்ந்த வெங்கடேஷ், மனைவி ரம்யா தம்பதி சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக நிறைமாத கர்ப்பிணியான மனைவி ரம்யாவை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார்.

ரயில் காலை புறப்படும் என்பதால் அங்கேயே இருவரும் தங்கிவிட்டனர். இதற்கிடையே ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட அங்கு அவருக்கு உதவ யாரும் இல்லை என கூறப்படுகிறது. கணவரம் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் வேதனையை வெளியில் சொல்ல முடியாமல் ரம்யா தனக்குத் தானே பிரசவம் பார்த்து அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் காலையில்தான் கணவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் அவரச சிகிச்சை மையத்துக்கு தகவல் தந்தனர். தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண்ணைக் கண்டு மருத்துவர்களே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.