கள்ளக்காதல்களில் இந்த மாநிலத்திற்கு தான் முதலிடம்! உயர்நீதிமன்றம் திடுக் தகவல்!

கள்ளக் காதல் குற்றங்கள் பெருக டி.வி.சீரியல்கள்தான் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கள்ளக்காதலை கிரிமினில குற்றமாக கருதமுடியாது என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட வழக்கில் அஜீத்குமார் என்பவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதற்கு எதிரான  அஜீத்தின் வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கள்ளக்காதல் குற்றங்களில் ஆந்திரா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தனர். திருமண பந்தத்தைத் தாண்டிய தகாத உறவுகள் சமூகத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் அவர்கள் கூறினர்.

அதே நேரத்தில் கள்ளக்காதலின் விளைவால் உண்டாகும் குற்றச்செயல்களும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். எல்லா வழக்குகளையும் போல இந்த வழக்கிலும் பல்வேறு நீதிபதி கிருபாகரன் அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

கள்ளக்காதல் அதிகரிக்க டிவி சீரியல்களும் திரைப்படங்களும்தான் காரணமா ? கள்ளக்காதலுக்காக வாழ்க்கைத் துணையை எப்படியெல்லாம் தீர்த்துக்கட்டலாம்? கூலிப்படைகளைக் கொண்டு எப்படி செய்யலாம்? என்பது போன்ற காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா ? 

பாலியல் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் காரணமாக கள்ளக்காதல்கள் வைத்துக்கொள்ளப் படுகின்றனவா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதீபதிகள் ஜூன் 21-க்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.