ஒரு மாசத்துல வீட்டுக்கு வந்துடுறேன்னு சொன்னானே..! மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த தாயின் கதறல்! அதிர வைக்கும் காரணம்!

ஒரே மாதத்தில் இந்தியா திரும்புவதாக கூறிய இளைஞர் சடலமாக தாயகம் வந்த சோக சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் குவைத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவர் பணம் சேர்த்து வைப்பதற்காக அங்கு நடத்தம் சீட்டுக் குழுவில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சீட்டுப் பணம் ரூ.4.60 லட்சம் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதை அவர் முறையாக திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணத்தை திருப்பி தருமாறு நண்பர்கள் பலர் நெருக்கடி கொடுத்துள்ளனர். சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய் என கேட்டு டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சீட்டு நடத்துபவர்கள் மோகன் குமார் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு டிக் டாக் வீடியோ வெளியிட்டனர். அதில் சீட்டு பணம் கட்டாமல் மோகன் குமார் காணாமல் போய்விட்டதாக பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மன வேதனை அடைந்த மோகன் குமார் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் தனது தயாருக்கு போன் செய்த மோகன் குமார் தான் நலமாக இருப்பதாகவம் ஒருமாதத்தில் இந்தியா வந்துவிடுவேன் எனவும் தெரிவித்து இருந்தார். ஆனால் பணப் பிரச்சனையில் விலைமதிக்கமுடியாத உயிரை நீத்து சடலமாக சொந்த ஊருக்கு மோகன் குமார் திரும்பியுள்ள சம்பவம் பெற்றோரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.