70 லட்சம் பள்ளிக் குழந்தைககளுக்கு பேருதவி..! மீண்டும் நெகிழ வைத்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இலவச கண் மருத்துவ சிகிச்சை திட்டம் அறிமுகம் செய்துள்ளார்.


ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள ஜூனியர் காலேஜ் மைதானத்தில் உலகப் பார்வை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, YSR Kanti Velugu எனும் புதிய மருத்துவ திட்டம் தொடங்குவதாக , அறிவித்தார். இந்த மருத்துவ திட்டத்தின்கீழ், ஆந்திர மக்கள் அனைவருக்கும் இலவசமாக கண் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றார்.  

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, அக்டோபர் 10 முதல் 16ம் தேதி வரை ஆந்திரா முழுவதும் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக, நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அடுத்தக்கட்டமாக, மற்ற மக்களுக்கும் கண் மருத்துவ சிகிச்சைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, 2.12 கோடி மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக, கண் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசிடம் பதிவு செய்த என்ஜிஓ ஹாஸ்பிடல்களில் இந்த இலவச கண் சிகிச்சை திட்டம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.