தமிழர்களுக்கு பட்டை நாமம் போடும் ஆந்திரா! இனிமே தண்ணிக்கு ஜிங்குச்சாம் போட வேண்டியதுதான்!

தமிழகத்தில் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவி இல்லையே என்ற கவலை இப்போதுதான் பெரிதாக எழுகிறது.

ஏனென்றால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லோரும் எட்டி உதைக்கின்றனர். இப்போது லேட்டஸ்டாக தமிழர்களுக்கு நாமம் போட்டிருப்பது ஆந்திரா. ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே  22 அடி உயரம் கொண்ட தடுப்பனையை 40 அடி உயரத்திற்கு உயர்த்தும்  பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாணியம்பாடி  வேலூர் மாவட்டத்திற்கு பாலாறு விவசாயிகளுக்கு ஜீவநதியாக விளங்கி வந்தது. ஆந்திராவின் அடாவடிதனத்தால் ஏற்கனவே 21 தடுப்பனைகள் கட்டப்பட்ட நிலையில்  அங்கே  ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றாலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பனைகளை கட்டுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

தற்போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் இருப்பார்கள் என்பதை கணக்கிட்டு பாலாறு கிராமத்தில் கிடிமாணிபெண்டா செல்லும் சாலைக்கு அருகில் கங்குந்தி தடுப்பனை ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே ஏழரை அடி உயரம் இருந்ததை தமிழக சட்டமன்ற தேர்தலின் போது 22 அடியாக உயர்த்தி கட்டிவிட்டார்கள். அதே இடத்தில் மீண்டும் 22 அடி உயரத்திலிருந்து 40 அடி உயரமாக தடுப்பனையை உயர்த்தும் பணி கடந்த 15 நாட்களாக பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அத்துடன் ஆற்றினுள் பகுதியில் மணலையும் ஆழப்படுத்தி நீர் கொள்ளளவை உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

தற்போது பாலாற்றின் குறுக்கே 21 அனைகளை உயர்த்தும் திட்டத்தில் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது ராமகிருஷ்ணாபுரம், கனேசபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா போன்ற இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பொகிலிரேவிலும் சுமார்ரூ.6 கோடி செலவில் அனையின் உயரம் சுமார் 40 அடி உயரமாக உயர்த்த பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஏற்கனவே பாலாற்றில் தடுப்பனைகளை கட்டிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நிலையில் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்போது கங்குந்தி அனையை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இனி பாலாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க வாய்ப்பில்லாத நிலையை ஆந்திர அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் வேலூர் .திருவண்ணாமலை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். அரசு தற்போது நடைபெறும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள்,சமுக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், எடப்பாடிக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?