என்ன காரியம் பண்ணப் பார்த்த? மணமேடையில் வைத்து மாப்பிள்ளையை தூக்கிய போலீஸ்! அதிர்ச்சி காரணம்!

ஒரு பெண்ணிடம் வரதட்சணை வாங்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த மணமகனை மேடையில் வைத்து போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.


ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் மோகன் கிருஷ்ணா. இவர் ஸ்டேட் பாங்க் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

அப்போது பெண் வீட்டாரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றிருக்கிறார். இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாருக்கு தெரியாமல் கோவிலில் ரகசியமாக வேறு ஒரு பெண்ணை மோகன் கிருஷ்ணா திருமணம் செய்யவிருந்தார். இந்த தகவல் அறிந்த பெண் வீட்டார் மோகன் கிருஷ்ணா மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் திருமண மேடையிலேயே மோகன் கிருஷ்ணாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்திருக்கின்றனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது