ஹிட்டாச்சி எந்திரத்தில் சிக்கிய தமிழக கூலி தொழிலாளி! ஆந்திராவில் பிழைப்பு தேடிச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆந்திரா கல்குவாரியில் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு குப்பம் போலீசார் விசாரணை.


ஆந்திர மாநிலம் சாந்திபுரம் மண்டலம் சோமாபுரம் ஆர்ஆர் கல்குவாரியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் தர்மபுரி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அருகாமையில் இருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உள்ளார்

சக ஊழியர்கள் காப்பாற்ற முயற்சி செய்தோம் இயந்திரத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தார் உடலை கைப்பற்றி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.