அன்புமணி வெற்றி மட்டும்தான் ராமதாஸ் ஆசை ! நாங்களாம் பலிகடாவா? டென்ஷனில் வேட்பாளர்கள்!

அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதி தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி அடக்கி வாசிப்பதாக புகார் சொல்கிறார்கள், அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.


அ.தி.மு.க. கூட்டணியில் மிகவும் கஷ்டப்பட்டு ஏழு தொகுதிகளை வாங்கினார் ராமதாஸ். அதன்படி அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியிலும்,வடிவேல் ராவணன் விழுப்புரத்திலும்,   கடலூரில்   இரா.கோவிந்தசாமியும், அரக்கோணத்தில் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சா ம்பாலும்   ஸ்ரீபெரும்புதூரில் பா.ம.க. துணைத் தலைவர் அ.வைத்திலிங்கமும், திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஜோதி முத்து   ஆகியோரும் போட்டியிகிறார்கள்.   

இப்போது அன்புமணி தொகுதிக்கு மட்டும் டப்பு செலவழிக்கப்படுகிறதாம். மற்ற தொகுதி நிர்வாகிகஈடம், ‘தேர்தல் நெருங்கும்போது பார்க்கலாம்’ என்று எதுவும் தராமல் தட்டிக் கழிக்கிறார்களாம். இப்படி தட்டிக்கழித்தால், கிடையாது என்பதுதான் அர்த்தம் என்று மற்ற 6 வேட்பாளர்களும் கொந்தளிக்கிறார்கள்.

அன்புமணி தவிர சாம் பால் மற்றும் ஏ.கே.மூர்த்தி மட்டும் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்துவருகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் கட்சிப் பணம் தரும் என்றுதான் எண்ணி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பணத்தை கண்ணில் காட்டுவதற்கு கட்சி தயாராக இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால் அ.தி.மு.க.விடம் இருந்து எதுவுமே வாங்கவில்லையா?

வாங்கியது உண்மைதான். ஆனால், அதனை சட்டசபை தேர்தலுக்காக வைத்திருக்கிறோம். ஏனென்றால் சட்டசபை தேர்தலில் மீண்டும் நாம் தனித்து அல்லது சில்லறைக் கட்சிகளுடன் இணைந்துதான் நிற்க வேண்டியிருக்கும். அதனால் அந்தப் பணம் அப்படியே இருக்கு. நீங்க ஜெயிச்சாலும் தோத்தாலும் நமக்கு குறிப்பிட்ட பர்சன்டேஜ் ஓட்டு கிடைச்சுடும், அதுபோதும் என்று சொல்கிறதாம் மேலிடம்.

என்னா வில்லத்தனம்..? விபரம் புரியாம சிக்கிட்டோமே என்று வேட்பாளர்கள் டென்ஷனாகிறார்கள்.