ஒரே ஒரு நாள் வந்தார்..! துரோகம் செய்துவிட்டு போய்விட்டார்! கனிமொழி வெளியிட்ட பகீர் தகவல்! யாரை பற்றி தெரியுமா?

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று ஒரே தேர்தலில் தமிழக முதல்வராக மாறிவிடும் ஆசையில் இருந்தார் ராமதாஸ்.


ஆனால், மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. அதன்பிறகு டயர் நக்கிகள் என்று எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும் வீராவேசமாகப் பேசி கிண்டல் செய்தார்.

அதன்பிறகு அவர்கள் காலில் விழுந்து மக்களவைக்குப் போட்டியிட்டு மண்ணக் கவ்வினார். அதன்பிறகும் அ.தி.மு.க.வின் தயவினால் ஒருவழியாக மாநிலங்களவை எம்.பி.யாக மாறிவிட்டார். அவர் நாடாளுமன்றத்திற்கு அதுவரை வந்ததே இல்லை. ஆனால் அன்று ஒரே ஒரு நாள் வந்தார். சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்த நேரத்தில், முதல் ஆளாக ஓட்டுப் போட்டு ஓடியே போய்விட்ட்டார். 

இதுகுறித்து இன்று பேசிய கனிமொழி, ‘‘அன்புமணியை நாங்கள் மாநிலங்களவையில் பார்த்ததே இல்லை. அப்படி தலைமறைவாகவே இருந்த ஆள், அந்த ஒரு நாளில் மட்டும் சரியாக ஆஜராகி அந்த ஒரு வாக்கையும் அநீதிக்கு ஆதரவாகப் போட்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற வழிவகுத்து துரோகம் செய்துவிட்டுப் போனார்’’ என்று கடுமையாகப் பேசியிருக்கிறார்.

கூட்டணின்னா இதையெல்லாம் செஞ்சுதான் ஆகணும் என்று அப்பா ராமதாஸ் இதற்கு ஏற்கெஅன்வே ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார், மகன் அன்புமணி என்ன பதில் சொல்லப்போகிறாரோ?