வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் அனகோண்டா பாம்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வேலூரை மிரட்டும் அனகோண்டா பாம்பு! வைரலாகும் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி அருகே தமிழக-ஆந்திரா எல்லை பகுதி உள்ளது.அப்பகுதியிலுள்ள காடுகளில் வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறன. இந்நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் எல்லைப்பகுதியில் உள்ள மோர்தானா அணையில் நீர்வரத்து சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தமிழக எல்லைப் பகுதிக்குள் வருவது வழக்கமாக நடந்து வருவதாகவும். இந்நிலையில் அதேபோல் ராட்சத மலைப்பாம்பு ஒன்று தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் அதை பார்த்த இளைஞர்கள் பலர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுயடுத்து அந்த பாம்பு ஏதோ ஒரு விலங்கை விழுங்கி விட்டு நகர முடியாமல் அதே இடத்தில் சுருண்டு படுத்திருப்பது போல் சமூக வலைதளங்களில் வீடியோவானது பரவிவருகிறது. இந்நிலையில் அதை பார்த்த மக்கள் பலர் அது அனகோண்டா வகை பாம்பாக இருக்கலாம் என அஞ்சி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வனத்துறையினர் அது ராட்சச வகை மலைப்பாம்பு எனவும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராம வாசிகள் தனிமையில் காட்டிற்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆடு மாடு கோழி ஆகியவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து அந்த பாம்பை பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் தனிமையில் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.