சாலையை கடந்து சென்ற பிரமாண்ட அனகோண்டா! பீதியில் உறைந்த மக்கள்!

ரியோ டி ஜெனிரோ: ராட்சத அணகோண்டா பாம்பு சாலையை கடப்பதற்காக, பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்னமெரிக்க நாடுகளில் அணகோண்டா எனப்படும் ராட்சத பாம்பு வகை காணப்படுகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் போர்ட்டோ வெல்ஹோ என்ற நகரில், பட்டப் பகலில், ஒரு ராட்சத அணகோண்டா சாலையை கடந்துள்ளது. உடனடியாக, அதிர்ச்சியடைந்த பயணிகள் பலரும் அப்படியே இருந்த இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, எட்டி ஓடினர். 3 மீட்டர் நீளமும், 30 கிலோ எடையும் உள்ள அந்த பாம்பு, மெதுவாக ஊர்ந்து, சாலையை கடந்து சென்றுள்ளது. அதுவரையும் அனைவரும் வாகனங்களை நிறுத்திவிட்டு பயத்துடன் அங்கேயே நின்றிருந்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப்  பரவிவருகிறது. இரை தேடும் நிகழ்வாக, அந்த அணகோண்டா சாலையை கடந்து சென்றிருக்கலாம் என, உயிரின ஆய்வாளர் ஃபிளேவியோ டெரஸினி தெரிவித்துள்ளார். இவ்வகை பாம்புகள், நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை எளிதாகப் பிடித்து விழுங்கிவிடும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

அணகோண்டா படம் பார்த்தே பயப்படும் மக்களுக்கு, அணகோண்டாவை நேரில் பார்த்தால் பயம் வராமலா இருக்கும்?