வயிற்றுக்குள் குழந்தை! நிறை மாத கர்ப்பினியாக திருமணம் செய்யும் பிரபல தமிழ் நடிகை!

7 மாத கர்ப்பமாக உள்ள நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


மதராசப்பட்டிணம், ஐ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த மாடலான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் எங்கே உள்ளார் என்ற தகவலே கிடைக்கவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்வதாக, சமீபத்தில் எமி ஜாக்சன் கூறியிருந்தார்.

ஆனால், அதன்பின் எந்த தகவலும் இல்லை. தற்போது, 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது என்றும் கூறி, அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வயிறு வீங்கிய நிலையில் எமி ஜாக்சன் பாதி அரை நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம், அவரது ரசிகர்களை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஒரே நேரத்தில் தள்ளியுள்ளது. இதைவிட அதிர்ச்சியாக, அடுத்தடுத்து சில புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

ஒரு புகைப்படத்தில் வெனிஸ் செல்வதற்கான விமான டிக்கெட்கள் என்றும், அங்கு சென்று திருமணம் செய்யப் போவதாகவும், கூறியிருந்தார்.  மற்றொரு  கைப்படத்தில் தனது காதலன் ஜார்ஜூக்கு எமி ஜாக்சன் லிப் டு லிப் கிஸ் தருகிறார். 

அதாவது வயிற்றுக்குள் குழந்தையை வைத்துக் கொண்டு திருமணம் செய்யப்போவதாக எமி கூறியுள்ளது தான் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.