ஓபிஎஸ் சொந்த ஊரில் மண்ணை கவ்விய அதிமுக..! வாகை சூடி அமமுக பெண் வேட்பாளர் கொடுத்த அதிர்ச்சி!

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டில் போட்டியிட்ட அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அதிமுக-விடம் அதிர்ச்சியும், அ.ம.மு.க தொண்டர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


7 ஆண்டுகள் பிறகு 2019 டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, ஓ.பி.எஸ்- ஸின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ளது கீழவடகரை பஞ்சாயத்து. இதற்கு உட்பட்ட அழகர்சாமிபுரம், கரட்டூர் ஆகியவற்றை இணைத்து பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டாக அறிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், அ.ம.மு.க சார்பில் மருதையம்மாள் என்பரும், அ.தி.மு.க சார்பில் மாரியம்மாள் என்பவரும் போட்டியிட்டனர். இதில், மருதையம்மாள் 1,700 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை 143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.

இதற்கிடையில், கீழவடகரையில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் செல்வராணி வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், முதல் வார்டில், முதல் ஒன்றியக் கவுன்சிலராக அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அ.ம.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது அதிமுக-விடம் அதிர்ச்சியும், அ.ம.மு.க தொண்டர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.