எப்போதும் இல்லாத வகையில் புதுவகையிலான தேர்தலை இப்போது தமிழகம் சந்திக்க இருக்கிறது. மேடை போட்டு விடிய விடிய பேசும் பழக்கம் எல்லாம் போயே போச்சு. இந்த தேர்தலில் வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு என்பதை புரிந்துகொண்டு, முன்னணியில் நிற்கிறது அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்.
தெருவுக்குத் தெரு வருகிறது அம்மா வாட்ஸ் ஆப் குரூப்... சேர்ந்துட்டீங்களா..?
ஆம், சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் 150 அம்மா வாட்ஸ் ஆப் குரூப்புகளை உருவாக்கி பிரசாரம் செய்ய அதிமுகவின் ஐடி விங் திட்டம் தீட்டியுள்ளது. இப்போது இளைஞர், முதியவர், பெண்கள் தொடங்கி எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் மற்றும் வாட்ஸ் ஆப் இருப்பதால் எல்லோரையும் சென்றடைய எளியவழியாக இது கருதப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளாக பிப்.24-க்கு முன்னதாக இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கப்படுமாம். அம்மாவின் நல்லாட்சி தொடர என்ற முழக்கத்துடன் அதிமுக அரசின் சாதனைகளை இந்த வாட்ஸ் குரூப் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனராம். 8300234234 என்ற எண் மூலம் இந்த வாட்ஸ் குரூப்பில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, இனி உங்க வாட்ஸ் ஆப்பிலும் அ.தி.மு.க. செய்திகளைப் பார்க்கலாம், ஓட்டு போடலாம்.