அம்மா ராஜாத்தி கோயிலில், மகள் கனிமொழி திராவிடக் கட்சி மீட்டிங்கில்! என்னா பாலிடிக்ஸ் நடக்குது இங்கே..?

அத்திவரதரை பார்த்துவிட்டு திரும்பியிருக்கும் கதிர் ஆனந்த்,


தி.மு.க. எப்போதும் சென்ற பாதையிலே செல்கிறது, ஆன்மிகப் பாதையில் போகவில்லை என்று சொல்கிறார். இதை கோயில் வாசலில் வைத்து எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழி எம்.பி.யின் தாயாருமான ராஜாத்தியம்மாள், மீண்டும் ஒரு முறை அத்திவரதரை வி.ஐ.பி.தரிசனம் செய்தார். துளசி மாலை, பாதாம், முந்திரி, உலர் பழங்களை கொடுத்து, ராஜாத்தியம்மாள் தரிசனம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சயன கோலத்தின் போதும் தரிசனம் செய்த ராஜாத்தியம்மாள், மீண்டும் நின்ற கோல அத்திவரதரை தரிசனம் செய்தார்.

இந்த நேரத்தில் திராவிட மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கனிமொழி, திராவிடக் கொள்கைகள்தான் நாட்டுக்குத் தேவை என்று குரல் எழுப்புகிறார். அதாவது மகள் பகுத்தறிவுக் கொள்கை பேச, அம்மா அத்திவரதரை போற்றுகிறார்.

நல்லா உருப்படும்டா நாடு.