நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

உடல் நலனுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது என்று தெரிந்தாலும் நெல்லிக்காய் பயன்படுத்த தயங்குபவர்களே அதிகம். சங்க காலம் முதற்கொண்டு நெல்லியின் அருமையை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்.


நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதைவிட, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலிகையைப் போன்று பயன் தருகிறது. குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

• தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினம் ஒன்றாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

• கண் எரிச்சல், கண்ணில் நீர் வழிதல், கண் சிவப்பாதல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் மருந்தாக செயலாற்றுகிறது.

• பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

• முகப்பொலிவு அதிகரிக்கவும், சருமம் பளபளப்பு அடையவும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.

சளி குறைவதுடன் தொண்டைப்புண், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தீர்வதற்கும் உதவுகிறது நெல்லிக்காய். ஆனால் நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிடுவது போதிய பலன் தருவதில்லை.