அமித்ஷா எச்சரிக்கை… அல்லுதெறிக்கும் திமுக

இந்தியா முழுவதும் வாரிசு அரசியல், ஊழல்களுக்கு முடிவு கட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டிலும் அதனை செய்துமுடிப்போம் என்று அமித்ஷா பேசியிருக்கும் விவகாரம் தி.மு.க.வினரை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பம் தொடங்கி பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, முதன்மைச் செயலாளர் நேரு என மேல்மட்ட நிர்வாகிகள் அனைவருமே ஊழல் செய்வதில் கொஞ்சம் சளைக்காதவர்கள். அதனால், ஒவ்வொருவர் மீதும் எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த பட்டியலில் உள்ள மேலும் பல திமுக நிர்வாகிகளின் சொத்துக்கள், பணப்பரிவர்த்தனைகள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கடந்த பல மாதங்களாக கண்காணித்து, விபரங்களை திரட்டி வருகின்றனர். இது தவிர இவர்கள் செய்துள்ள சட்ட விரோதமான அந்நிய முதலீடுகள் பற்றி அமலாக்கத்துறையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதி கிணறு தாண்டியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் வரும் டிசம்பர் முதல் வாரம் தொடங்கி திமுக புள்ளிகளை இலக்கு வைத்து மத்திய அமைப்புகள் சாட்டையை சுழற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினின் உள்வீடு வரை இந்த நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து வந்து இன்றைக்கு கோடிகளில் மிதக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மத்திய அமைப்புகளின் கிடுக்கிப்பிடியில் சிக்கப்போவது நிச்சயம் என்கிறார்கள் இவர்கள். டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரை நீளும் இந்த அதிரடி ஆபரேஷன் திமுகவை அடியோடு ஆட்டம் காணச் செய்யும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் ’அரசியல் பழிவாங்கல்’ என்கிற விமர்சனம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆளும் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் மீதும் மத்திய அமைப்புகள் பாய்ச்சல் காட்டுமாம். ஆக மொத்தத்தில் அடுத்த ஒரிரு வாரங்களில் மத்திய அமைப்புகளின் தமிழக ஆபரேஷன்தான் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகவிருக்கிறது. இதற்கான திட்டங்கள் டெல்லியில் மிகத் துல்லியமாக வகுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டாலினுக்குச் சிக்கல்தான்.