தலைவர் பதவி பறிப்பு! தேசிய அளவில் புதிய பொறுப்பு! தமிழிசைக்கு அமித் ஷாவின் அதிரடி அசைன்மென்ட்!

தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு தேசிய அளவில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். ஆனால் சொல்லிக் கொள்ளும் படி எந்த சாதனையும் அவரால் நிகழ்த்த முடியவில்லை. இடைத்தேர்தல் தொடங்கி, சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது.

இதனால் தமிழிசை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் பாஜகவை பொறுத்தவரை ஒருவரை ஒரு உயர் பதவியில் இருந்து அகற்றினால் அவருக்கு வேறு ஒரு பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் தமிழிசை பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவருக்கு ஆந்திர மாநில பாஜக பொறுப்பாளர் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அமித் ஷா இறுதி ஆ லோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் புதிய பதவி தமிழிசைக்கு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் தலைவர் பதவியில் இருந்து எதையும் சாதிக்க முடியாமல் வேறு பொறுப்புக்கு செல்வதை நினைத்து கடந்த சில நாட்களாகவே தமிழிசை வேதனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் தான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போதும் கூட தமிழிசை மிகுந்த சோர்வுடனேயே பேசியுள்ளார்.