விடைபெறும் அமித்ஷா! பாஜக புதிய தலைவர் யார்? மோடி அதிரடி முடிவு!

பாஜக தலைவர் பதவியிலிருந்து அமைச்சராக உள்ள நிலையில் பக்கத்திற்கு யாரை நியமிப்பது என்று மோடி முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30ஆம் தேதி பதவியேற்க உள்ளார். மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கிய இலாகா வழங்கப்பட உள்ளது.

உள்துறை அல்லது நிதித்துறை அமித்ஷா வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஒரு கொள்கை மிகக் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவர் மத்திய அமைச்சராகவும் மாநில அமைச்சராகவும் இருக்கும் பட்சத்தில் அவரால் கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்க முடியாது. அந்த வகையில் மத்திய அமைச்சராகும் அமித் ஷா தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது.

அமித்ஷா தலைமையில் தான் பாஜக இதுவரை இல்லாத உச்சத்தை. வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி, மேற்கு வங்க நாடாளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகள் என பாஜக அமைச்சர் தலைமையில் செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியது. இதனால் அமித்ஷாவிற்கு பிறகு பாஜக வின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் வலுவான ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பெயர் பாஜக தலைவர் பதவிக்கு அதிகம் அடிபடுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். சுகாதாரத்துறை இனம் மிக முக்கியமான இலாகாவை கவனித்து வரும் இவர் பாஜக தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

ஜேபி நட்டா தவிர மத்திய அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான் பெயரும் புதிய பாஜக தலைவர் போட்டியில் அடிபடுகிறது. மோடியின் நம்பத்தகுந்த அமைச்சர்கள் பட்டியலில் தர்மேந்திர பிரதான் அது மிக முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில் jp நட்டா அல்லது தர்மேந்திர பிரதான் பாஜகவின் கட்சித் தலைவர்கள் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.