இறுதிச் சடங்கில் வீட்டு வேலைக்காரரின் உடலை சுமந்து சென்ற அமிதாப் பச்சன்! நெகிழ வைத்த சம்பவம்!

மும்பையில் தன் வீட்டில் வேலை செய்த ஒருவரின் இறுதி சடங்கில் அமிதாப் பச்சன் செய்த செயல் வைரலாகி வருகிறது.


மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் அவரது வீட்டில் பணியாற்றிய நபரின் இறுதிச்சடங்கில் சவப்பெட்டியை தூக்கிச் செல்வது போன்ற புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் உலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் தங்கள் வீட்டில் பணியாற்றிய ஊழியர்களை தன் சொந்தக்காரர்கள் போலவே நடத்தி வருவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வேலைப்பார்த்த ஒரு முதியவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்குக்கு சென்ற அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் சவப்பெட்டியை அவர்களின் உறவினர்களோடு சேர்ந்து சுமந்து சென்றனர். அதை அருகில் உள்ளவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர் அமிதாப்பச்சன் குடும்பத்தின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.