என்னாப்பா ஹைதராபாத் இப்படி ஊத்திக்கிச்சே.. வேதனையில் அமித்ஷா குரூப்

எப்படியும் ஹைதராபாத்தை கைப்பற்றியே தீரவேண்டும் என்று மோடி முதல் யோகி வரை களம் இறங்கியும், இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது என்று பா.ஜ.க. கவலை தெரிவித்துள்ளது.


ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று மாற்றுவோம்," என்று உத்திரபிரதேச முதல்வர் யோகியும், ’நிஜாம் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டுவோம்’ என்று அமித் ஷாவும் மார் தட்டினார்கள். 

நாட்டின் உள்துறை அமைச்சரும், வேறொரு மாநிலத்தின் முதல்வரும் வேலைவெட்டி இல்லாமல் சாதாரண மாநகராட்சித் தேர்தலுக்கு இன்னொரு மாநிலம் சென்று வரிந்து கட்டியதை உலகம் இழிவாகப் பார்த்தது. 

எனினும் இது பதிவாகும். ஊடகச் சதிகளை மீறி வரலாறு வேறொரு விதி சமைக்கும். ஹைதராபாத் மாநகரட்சி தேர்தலில் 48 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது பாஜக. இனியாவது தென் இந்தியாவில் தங்கள் திட்டம் வேலைக்காவாது என்பதை காவிக் கும்பல் உணருமா..?