ஜம்மு காஷ்மீர் இனி மாநிலம் அல்ல! அமித்ஷா அதிரடி! 370வது சட்டப்பிரிவும் அவுட் !

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்று புரியாத நிலையே நீடித்துவந்தது.


முக்கியத் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறை வைக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும், பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திடீரென நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு 

குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது. இப்போது 370வது பிரிவு ரத்தால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கலாம். வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு- காஷ்மீரில் அம் மாநில பெண்கள் சொத்துக்களை வாங்கலாம்.

மேலும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு -காஷ்மீர் செயல்படும்; சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அவங்க எதிர்ப்பு தெரிவிச்சாலும் கேட்கிறது யாரு..?