வெளிநாட்டில் வேலை மோகம்! ரூ.60 லட்சத்தை பறிகொடுத்த அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள்! பரிதாப சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பண மோசடி செய்த பேராசிரியரை போலீஸ் தேடி வருகிறது.


சென்னை அமிர்தா ஒட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் 2016ம் ஆண்டு கோவையை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக அதே கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் ரமேஷ்பாபு தலா 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை வசூலித்துள்ளார். 

பின்னர் படிப்பு முடிந்த நிலையில் வேலை வாங்கித் தருமாறு பேராசிரியர் ரமேஷ் பாபுவிடம் உள்பட மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கவே சந்தேகம் அடைந்த மாணவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் ஓட்டல் ஒன்றில் கொடுத்தது போல் பணிநியமன ஆணையை மாணவர்களுக்கு வழங்கி சமாளித்துள்ளார் பேராசிரியர் ரமேஷ் பாபு.

ஆனால் அதையும் போலி என கண்டுபிடித்த மாணவர்கள் பணம் கேட்ட அவரிடம் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பேராசிரியர் ரமேஷ் பாபு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டடார். இது குறித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்பட பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மற்றும் சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் 30 மாணவர்களிடம் சுமார் 70 லட்சம் வரை பணம் வசூலித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இதை அடுத்து அநத் பேராசிரியர் குறித்து சமூகவலைளதளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது போட்டோவுடன் பதிவிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் பேராசியிரியர் ரமேஷ் பாபுவின் பித்தலாட்டங்களை பார்த்த உத்தரபிரதேசத்தில் இருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு அவர் எங்கள் மாநிலத்தில்தான் இருக்கிறார் என்று சொல்லி உள்ளனர். ஏற்கனவே பணத்தை இழந்த நிலையில் உத்தர பிரதேசம் சென்று மொழி தெரியாமல் அலைய முடியாது என்பதால் ரமேஷ் பாபு குறித்த ஆதாரங்களுடன் மீண்டும் காவல்துறையை மாணவர்கள் நாடியுள்ளனர்.