வேலைக்கு அப்ளிகேசன் போட்ட இளம் பெண்! ஆபாசப்படத்தை வெளியிட்ட கம்பனி! அதிர வைக்கும் சம்பவம்!

டெக்சாஸ்: இன்டெர்ன்ஷிப் கோரி விண்ணப்பித்த இளம்பெண்ணுக்கு அவரது இன்ஸ்டாகிராம் போட்டோவே வில்லனாக மாறியுள்ளது.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் பகுதியை சேர்ந்தவர் எமிலி குளோவ் (24 வயது). இவர், Kickass Masterminds எனும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் கேட்டு விண்ணப்பித்திருந்தார். எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தவருக்கு ஒரு விநோத பதில் காத்திருந்தது. ஆம், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த பிகினி புகைப்படம் ஒன்றை எடுத்து, அந்த நிறுவனம், அவருக்கு ஒரு பதில் அளித்திருந்தது.  

அதாவது, எமிலியின் பிகினி புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே ''எங்களுக்கு ஒரு தொழில்முறை சந்தை நிபுணர்தான் தேவை, பிகினி மாடல் அல்ல,'' எனக் கூறி, நிராகரித்துவிட்டனர். மேலும், வேலை கேட்டு விண்ணப்பம் செய்வோர், தங்களது அந்தரங்க புகைப்படங்கள், தகவல்கள் அடங்கிய தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தரக்கூடாது எனவும், அப்படி கொடுத்தால் இப்படித்தான் நடக்கும், எனவும் அந்த புகைப்படத்தில், கிக்ஆஸ் மாஸ்டர்மைன்ட்ஸ் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.  

சாரா கிறிஸ்டின்சென் என்ற பெண்தான் இத்தனைக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அதிரடியால் அதிர்ந்து போன எமிலி, தனக்கு நியாயம் கேட்டு ட்விட்டரில் சண்டையிட, அது தற்போது வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், கிக்ஆஸ் நிறுவனம், தனது அனைத்து ட்விட்டர் கணக்குகளையும் திடீரென முடக்கி வைத்துள்ளது.  

ஒரே ஒரு டூ பீஸ் போட்டோவை பதிவிட்டதற்காக, வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் ஊரில் கக்கா போவது முதல் உறங்குவது வரை செல்ஃபி எடுத்து  சமூக ஊடகங்களில் பகிர்வோர் இதைப் படித்த பிறகாவது திருந்துவார்கள் என்று நம்புவோம்...