சூப்பர் மார்கெட்டில் உருளைக்கிழங்கின் மீது சிறுநீர்! சிசிடிவியில் பதிவான இளம் பெண்ணின் கேவலமான செயல்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு அங்காடியில் உருளைக்கிழங்கு பாஸ்கட்டில் சிறுநீர் கழித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த இளம்பெண் கிரேஸ் பிரவுன். இவர் இங்குள்ள வால்மார்ட் அங்காடிக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் நடந்து கொண்ட விதம் சற்றும் எவரும் எதிர்பார்க்காத ஒன்று.

அந்த அங்காடியில் வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு பாஸ்கட்டில் கிரேஸ் பிரவுன் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுவிட்ட அங்காடி அலுவலர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் அந்தப் பெண் தப்பி ஓடி விட்டார். அங்காடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த சிசிடிவி காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டனர். இதனால் தனது குட்டு வெளிப்பட்டு விட்டதால் வேறு வழி இன்றி கிரேஸ் பிரவுன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஒரு சிலர் பொருள்களை திருடுவதற்காக அங்காடிகளுக்குள் நுழையும் நிலையில் கிரேஸ் பிரவுன் அங்காடிக்குள் நுழைந்த காரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்கான குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்