விற்பனைக்கு வருகிறது அமெரிக்க சொப்பன சுந்தரி கார்! விலையை கேட்டால் தலை சுற்றும்!

லிஸ் டெய்லர் என்று செல்லமாக அமரிக்கர்களால் அழைக்கப்பட்ட எலிசபெத் டைலர்


லிஸ் டெய்லர் என்று செல்லமாக அமரிக்கர்களால் அழைக்கப்பட்ட எலிசபெத் டைலர் நிஜமாகவே அந்த கால அமெரிக்கர்களின் சொப்பன சுந்தரிதான்.அவர் நடித்த கிளியோபாட்ரா படத்தை அமெரிக்கர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள்.அந்த சொப்பன சுந்தரி ஒரு கார் வைத்திருந்தார்,சாதாரண கார் அல்ல ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் க்ளவுட் 2 !.மார்ச் 1955 முதல் ஏப்ரல் 1966 வரை விற்பனை செய்யப்பட்ட இந்த காரில் ஸ்மோக் கிரீன்  நிறகாரை வைத்திருந்தார் எலிசபெத் டைலர்.

அந்தக்கார்தான் இப்போது ஏலத்துக்கு வருகிறது.அவரது கணவர்களை விட எலிசபெத்துடன் அதிககாலம் வாழ்ந்த இந்தக்கார் இப்போது நியூயார் நகரில் உள்ள பியர் என்கிற நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.1960 ல் இந்தக் காரை வாங்கினார் எலிசபெத் .இதுவரைவெறும் 40000 மைல்தான் இந்த அதிர்ஷடக்கார கார் பயணித்து இருக்கிறது.

இது கண்வர்ட்டபிள் கார். வெறும் 20 கார்கள்தான் தயாரிக்கப்பட்டதாம்.ஒரு சாதாரண மனிதர் பயண்படுத்திய இந்த மாடல் காரின் தற்போதைய அதிகபட்ச மார்க்கெட் விலை 7 லட்சம் டாலர்தான்.ஆனால் எலிசபெத்தின் கார் 3.8 மில்லியனுக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.அதாவது நம்ம ஊர் காசுக்கு கிட்டத்தட்ட 25 கோடி! சொப்பன சுந்தரினா சும்மாவா.