ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் போனஸாக சுமார் 70 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ள தனியார் நிறுவனத்தின் செய்தியை கேட்டு இப்படியும் நிறுவன தலைவர்கள் இருக்கிறார்களா? என பலரும் ஆச்சரியப்பட்டனர்.
ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.35 லட்சம் போனஸ்! முதலாளி கொடுத்த இன்ப அதிர்ச்சி! எங்கு, ஏன் தெரியுமா?

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் வரை போனஸாக வழங்கியிருக்கிறது. நிறுவனத்தின் வருடாந்திர பார்ட்டி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு அதன் நிறுவனத் தலைவர் சிவப்பு நிற பைகளை வழங்கினார்.
வழங்கிய பிறகு உரையாற்றிய நிறுவனர் அனைவரையும் பைகளை திறந்து பார்க்க சொன்னார். பைகளை திறந்து பார்த்த அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், அதில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் போனஸ் சம்பளத்தை விட அதிக அளவில் வழங்கப்பட்டிருந்தது. அதாவது ஒவ்வொருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தன.
இதுகுறித்து மேலும் பேசிய நிறுவனத்தின் தலைவர், இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரிய அளவில் தலைமையிடம் கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோல, 8 மாகாணங்களில் நிறுவனத்தின் கிளைகள் விரிவடைந்துள்ளது. இதனை கொண்டவை ஊழியர்களுக்கு இத்தகைய போனஸ் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.