வெட்டியாத்தான் வர்றாராம் டொனால்ட் ட்ரம்ப்! வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பே இல்லையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24, 25ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வர உள்ளார்.


அப்போது இந்தியாவுடன் சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில். இந்த சுற்றுப் பயணத்தில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இந்தியாவுடன் எங்களால் தற்போது புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பில்லை எனவும், எதிர்காலத்தில் இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்புள்ளது என்று வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிசர் இந்த பயணத்தில் பங்கேற்க மாட்டார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்த நிலையில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி காரணம். அமெரிக்க - சீன வர்த்தகப் போர், அமெரிக்கப் பொருட்களின் மீது இந்தியாவின் கூடுதல் வரி போன்ற காரணங்களால் இந்தியாவுடனான வர்த்தக வளர்ச்சி குறைந்துள்ளது. 

கடந்த 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அமெரிக்கா, இந்தியா இடையே சரக்கு மற்றும் சேவை வர்த்தகம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான இரண்டு காலாண்டுகளில் 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கும் இடையே தற்போது 7.5 சதவீதம் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப். அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்ததுடன். இந்தியாவில் எங்களுக்கு சரியான மரியாதை இல்லை" என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தின் போது அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் வருகையின் காரணமாக. அகமதாபாத் நகரில் அமைந்துள்ள குடிசைகளை மறைக்க மாவட்ட நிர்வாகம் சுவர் கட்டி வரும் விவகாரம் பூதாகரமாக எழுந்து வரும் நிலையில். வெளிநாட்டு முதலீடுகள் எதுவும் இல்லாமல். தேவையின்றி ஏன் 100 கோடி செலவு செய்து அமெரிக்க அதிபரை வரவேற்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

மணியன் கலியமூர்த்தி