ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக காரில் பெண்கள் உல்லாச பயணம்! துரத்தி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நிர்வாண கோலத்தில் காரை ஓட்டிச் சென்ற மூன்று பெண்களை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை அன்று ஒரு அசாதாரண நிகழ்வைக் கண்டு ஒரு போலீசார் அதிர்ச்சியுற்றார். அது என்னவென்றால் மூன்று பெண்கள் நிர்வாணமாக காரில் அமர்ந்திருந்ததே ஆகும். இதுபற்றிய தகவலின் பேரில் போக்குவரத்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த மூன்று பெண்களும் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர்.

சாலை விதிகள் எதையும் மதிக்காமல் போலீசாரின் எச்சரிக்கையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்களின் நிர்வாண பயணம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு எலியும் பூனையும் போல் அந்தப் பெண்களை போலீசார் துரத்திச் சென்று உள்ளனர். அந்தப் பெண்களும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சந்து பொந்துக்குள் புகுந்து புகுந்து சென்றுள்ளனர்.

ஒருவழியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண்களிடம் விசாரித்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். குளித்து முடித்துவிட்டு தலைமுடியை காய வைப்பதற்காகவே இவ்வாறு காரில் நிர்வாண கோலத்தில் சென்றதாக அந்த பெண்கள் கூறியுள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய அந்த பெண்கள் மீது அதிகாரியை தாக்கியது, போக்குவரத்து விதியை மதியாதது, தப்பி ஓட முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.