2 கைகளும் இல்லாமல் விமானத்தை ஓட்டிச் சாதனை! அசத்தும் பெண் பைலட்!

பிறக்கும் போதே இருகைகளும் இல்லாமல் பிறந்த பெண், தன் கால்களால் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது, கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.


அமெரிக்க , டஸ்கான் பகுதியை சேர்ந்தவர் ஜெசிக்கா காக்ஸ், பிறக்கும் போதே இரு கைகளும் இல்லாது பிறந்த ஜெசிக்கா  பல்வேறு அவமானங்களையும், சவால்களையும் மேற்கொண்டதாகவும், அதற்காக சோர்ந்து விடாமல் அந்த  அவமானங்களே  சாதனைகளை  நோக்கி தன்னை உந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜெசிகாவும் சராசியான பெண்ணிற்க்கான அத்துனை ஆசைகளை கொண்டிருந்தாலும் அவர் கைகள் இல்லாத நிலை மற்றவர்களுடனான அவரின் நெருக்கத்தை அதிகமாக தொலைக்கசெய்திருக்கிறது, பள்ளி பருவத்தில் மற்ற குழந்தைகளை போல ஊஞ்சலில் பறக்க பேராசை கொண்ட ஜெசிக்கா தனது அயராத உழைப்பினால் பெண் பைலட்டாக சாதனை படைத்து மகுடம் சூடியிருக்கிறார்.

இது பற்றி ஜெசிக்கா பகிர்ந்து கொண்டபோது, தான் கைகள் இல்லாமல் பிறந்தது என்னுடைய பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம்,  ஆனால் அவர்கள் எனை வெறுக்காமல்  இன்று வரை  கொடுத்த ஊக்கமே என்னை உருவாக்கியதாக கூறியவர், ஆரம்பத்தில் தனது முடியை கட்டிகொள்ள கூட இன்னொருவரின் உதவிய நாட வேணஇயிருக்கும், ஆனால் இப்போது 3 வருட கடின உழைப்பிற்க்கு பின்னர் இந்த சாதனை சாத்திய மாகியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ஆரம்பகட்டத்தில் எனக்கான இந்த ஆசையை கண்டு பலர் கேலி செய்ததுண்டு, பலர் உற்சாகமும் அளித்துள்ளனர், ஆனால் தொடர்ந்து கடினமான உழைத்தது தான் இரு கைகளும் இல்லாமல் கால்களினால் கிட்டத்தட்ட 89 மணி நேரம் விமானத்தை இயக்கியதாக பெருமை கொண்டார்.

சராசரியாக 6 மாத கால பயிற்சி யை ஜெசிக்கா 3 வருடங்களுக்கு பின்னர் மிக நேர்த்தியாக முடித்ததுடன் , அசத்தலாக விமானத்தை இயக்கியதன் மூலம் அவரை போன்ற மற்ற மாற்று திறனாளிகளுக்கும் சாதனைகள் புரிய இவரது உழைப்பு உந்துதலாக இருக்கும்.

பொதுவாக நன்றாக பிறக்கும் பலர் சராசரியான விசயங்களுக்கும் முடியாது, தெரியாது என புலம்பும்போது ஜெசிக்கா போன்றோரின் சாதனைகள் பிரமிக்கவைக்கிறது எனலாம்.