கேன்சரால் தவிக்கும் 4 வயது தம்பி! அரவணைத்து அன்பு காட்டும் 5 வயது சகோதரி! கலங்க வைக்கும் தாயின் பரிதவிப்பு!

ஒரு குடும்பத்தில் புற்றுநோயால் அவதிப்படும் ஒரு குழந்தையை பார்க்கும் மற்ற குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வேதனையுடன் பதிவிட்டுள்ளார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தை சேர்ந்த ஒரு தாய்.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கும் கைட்லின் பர்க் என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட்டிருந்தார். அது என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் 4 வயது மகன் பெக்கெட் அவனுக்கு துணையாக இருக்கும் 5 வயது மகள் ஆப்ரி பற்றிய பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

எலும்பு மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெக்கெட், மிகவும் மெலிந்த உடலுடன் கழிவறையில் நிற்கிறான். அவனுக்கு பக்க பலமாக பின்னால் நிற்கிறார் சகோதரி ஆப்ரி. இந்தப் புகைப்படம்தான் 2 வாரங்களாக வைரலாகி உள்ளது. இது குறித்து இவர்களின் தனது பதிவில், ``குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மனநிலையையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

4 வயது தம்பிக்கு டாக்டர்கள் தொடர்ந்து ஊசி குத்துவதையும், அவன் பல மருந்து, மாத்திரைகளை உட்கொண்டதையும் சகோதரி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். தம்பிக்கு என்ன பிரச்சனை என்று முழுமையாக தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஆனால் அவனுக்கு ஏதோ பாதிப்பு என செயலற்று நிற்கிறார் மூத்த சகோதரி என தாய் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் தேவை என குறிப்பிட்டுள்ள கைட்லின் அவர்களைப் பிற குழந்தைகளிடமிருந்து பிரித்து வைக்கக் கூடாது என கூறியுள்ளார். ஆப்ரி, மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள். அவனை ஆதரித்தாள். நேரம், காலம் பார்க்காமல் அவனைக் கவனித்துக்கொள்கிறாள்.

`தம்பிக்காக நிறைய நேரத்தைத் தியாகம் செய்துள்ளார் ஆப்ரி. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள் அதுவே இருவருக்கும் சிறந்தது” என கைட்லின் கூறியுள்ளார்.