20 லிட்டர் தாய் பால்..! கேட்போருக்கு எல்லாம் கொடுத்து நெகிழ வைக்கும் 2 குழந்தைகளின் தாய்..! அசர வைக்கும் காரணம்!

விர்ஜீனியா: அமெரிக்க பெண் ஒருவர் 20 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்துள்ளார்.


விர்ஜீனியாவை சேர்ந்தவர் கினா மிச்செல். 36 வயதாகும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு 3 வயது. இந்நிலையில்,  2வது குழந்தை பிறந்தது. மூத்த மகள் பிறந்த சில மாதங்களிலேயே, தாய்ப்பால் தானம் அளிக்கும் பணியில் கினா ஈடுபட தொடங்கினார். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், மற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தாய்ப்பால் தானம் செய்வதை முக்கிய பணியாக கினா பின்பற்றினார். கடந்த 2 ஆண்டுகளில், சுமார் 20 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்துள்ளதாக, அவர் குறிப்பிடுகிறார்.  

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ''எனது தாய், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தாய்ப்பால் தானம் செய்வது வழக்கம். அதுபற்றி என்னிடம் அடிக்கடி பெருமையாகக் கூறுவார். மேலும், என்னையும் அப்படி செய்ய சொல்லி வலியுறுத்துவார். தாய்ப்பால் தானம் என்பது மிக முக்கியமான விசயமாகும். ஒரு குழந்தை பிறந்ததும், நானும் தாய்ப்பால் தானம் செய்ய தீர்மானித்தேன்.

அதற்கான நன்றியாக, ஒவ்வொரு ஆண்டும் என் வீட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் குவியும். அதுதான் எனக்கான பாராட்டு. பலருக்கு, தாய்ப்பால் சுரப்பதில்லை. இதனை சரிகட்ட அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்வது நலம்,'' என தெரிவித்துள்ளார்.