பட்டு வேட்டி பட்டு சட்டையுடன் தமிழ்ப் பெண்ணுக்கு கணவனானா அமெரிக்க டாக்டர்! இது ஒரு காதல் கதை!

தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவ மாணவியும், அமெரிக்க மருத்துவ பேராசிரியரும் இணைந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவு அமெரிக்க மாகாணத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சூப்பர் மார்கெட் ஒன்றை நடத்தி வரும் அய்யாவுக்கு, ஷான் மற்றும் சபரினா என இரு பிள்ளைகள் உள்ளனர், இதில் ஷபரினா மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார், அவருக்கு ஆசிரியராக இருந்த கயல் மாரஸ்கிளவ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. 

நாளடைவில், இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வர, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நிச்சயக்கபட்டது. இந்த நிலையிப் தான் ஷபரினா அப்பா அய்யாவு தனது மகளின் திருமணம் சொந்த ஊரில் தான் நடக்க வேண்டும் என கேட்க, அதற்கு மாப்பிள்ளை வீட்டாரும்.சம்மதம் தெரிவித்து உள்ளனர். 

கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருவரது திருமணம் ஊர் சூழ கோலாகலமாக நடைபெற்றது, தமிழக பெண் அமெரிக்க நபரை திருமணம் செய்து கொள்வது வாடிக்கையான நிலையில் இந்த ஜோடிக்கும் சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.