ஒரே இரவில் பாட்டிலில் இருந்த மொத்த பல் வலி மருந்தையும் எடுத்துக் கொண்டதால் இளம்பெண்ணின் ரத்தம் நீல நிறமாக மாறிய விநோதம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. இது மருத்துவர்களையும் சில நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பல் வலிக்கு மருந்து சாப்பிட்ட இளம்பெண்! உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறிய ரத்தம்! பகீர் சம்பவம்!
நியூயார்க்கில் வசித்து வந்த 25 வயது மிக்க இளம் பெண் ஒருவர் பல்வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, அருகில் இருந்த மருந்து கடைக்குச் சென்று நடந்ததைக் கூறியதில், அங்கிருந்தவர் பென்சோகெய்ன் பல் வலி நிவாரண கிரீமை இந்த இளம் பெண்ணிற்கு அளித்துள்ளார்.
இரவு முழுவதும் தொடர்ந்து வலியால் துடித்ததால் அவ்வபோது இந்த வலி நிவாரணி கிரீமை தடவிக் கொண்டே இருந்துள்ளார் இளம்பெண். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் காலை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்துப் பார்த்ததில் இப்பெண்ணின் ரத்தம் நீல நிறத்தில் மாறி இருப்பதையும், இதன் காரணமாகவே உடல் சோர்வடைந்து மயங்கி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இளம்பெண்ணை மெதெடோ குளோபினிமியா எனும் நோய் தாக்கி இருப்பதையும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அளவுக்கதிகமாக வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதால் இரத்த சிவப்பனுக்களின் வடிவம் முற்றிலுமாக மாறி திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு சென்றடைந்தால் ரத்தம் நீல நிறமாக மாறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சராசரியாக 90 முதல் 95 சதவீத ஆக்ஸிஜன் உடலில் இருக்க வேண்டும். ஆனால் பெண்ணின் 67 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது. 60 க்கும் கீழ் குறைந்திருந்தால் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரையே இழக்க நேரிட்டு இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தது பேரதிர்ச்சியாக இருந்தது.
மேலும் பல் வலி நிவாரணியாக பயன்படுத்திய பென்சோகெய்னை முற்றிலுமாக தவிர்க்குமாறு இளம்பெண்ணுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறினர். மூன்று நாட்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுமாறும் தெரிவித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை மூன்று பேர் இதுபோன்று ரத்தம் நீல நிறமாக மாறி உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.