ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பழமையான தமிழ் மொழியில் பச்சை குத்திகொண்டு அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதார்த்தம்..! புலணுணர்வு..! முதுகில் தமிழில் பச்சை குத்திய ரஷ்ய இளம் பெண்! சிலிர்க்க வைக்கும் காரணம்!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சமந்தா என்ற பெண்மணி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உலகின் மிகவும் பழமையான மொழியில் பச்சை குத்த வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதையடுத்து அவர் தமிழ் மொழியை தேர்வு செய்து அதில் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
உலகின் மிகவும் பழமையான மொழி எது என்பதை கண்டறிய கூகுள் தேடலை பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் அதில் தமிழ் மொழியை மிகவும் பழமையான மொழி என உறுதி செய்த பிறகு தனக்கு பிடித்தமான வாசகத்தை ரஷ்ய தூதரகத்தில் உள்ள பிரெஞ்சு தத்துவஞானியிடம் கொடுத்துள்ளார்.
அதில் " there is nothing called reality there is only perception " என்ற வார்த்தையை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தருமாறு கேட்டுள்ளார்.இதையடுத்து அவர் சமந்தாவின் தமிழ் தெரிந்த நண்பர் ஒருவருக்கு அந்த செய்தியை அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து " யதார்த்தம் என்று எதுவும் இல்லை புலனுணர்வு மட்டுமே உள்ளது" அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த வாசகத்தை சமந்தா தனது தோள் பட்டையில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து பச்சை குத்திக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.அதில் தமிழ்மொழியில் பச்சைகுத்திய சுவாரசியமான பின்னணி காரணத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.