வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் என மகிழ்ந்த கர்ப்பிணி! ஆனால் பிரசவத்தின் போது தெரிய வந்த பேரதிர்ச்சி!

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் ஒரு குழந்தையின் உடலில் கரு ஒட்டியிருந்தது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து அந்த கரு அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.


கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த மோனிகாவுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஒரு குழந்தை வளர்ச்சி பெறாத நிலையில் உயிரற்ற கருவாக இருந்தது. 

பிறந்த குழந்தையின் உடலில் அந்த கரு ஒட்டியிருந்ததால் அறுசை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

24 மணிநேரத்திற்கு பின்னர் குழந்தை உடலில் ஒட்டியிருந்த கரு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

மோனிகா கருவுற்றிருந்த சமயம் 7வது மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் 2 தொப்புள் கொடி இருப்பதை உறுதி செய்தனர். இதனால் இரட்டையர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள் என மருத்துவர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு கருவுக்கு மட்டும் மூளை, இதயம் உள்ளிட்ட அத்தியாவசிய உறுப்புகள் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

அதே சமயம் வளர்ச்சியடைந்த கரு, வளர்ச்சி அடையாத இன்னொரு கருவை பாதிக்கவில்லை என்பதால் குழந்தை வயிற்றில் இருந்த காலத்தில் எந்த முயற்சியும் மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை.

பொதுவாக வளர்ச்சி அடையாமல் இருக்கும் கருவால் தாய்க்கோ மற்றொரு குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.