உலகின் அதிவேகமான பெண்மணி! யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த துயரம்!

உலகிலேயே அதி வேகமாகக் கார் ஓட்டும் பெண்மணி எனப் பெயர் பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஜெஸிகா கோம்ப்ஸ் என்பவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிகா கோம்ப்ஸ் என்பற பெண்மணி ஜெட் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தை காரில் பொருத்தி வேகமாக ஓட்டுவதில் பெயர் பெற்றவர். இதன் காரணமாகவே உலகில் அதிக வேகமாகக் கார் ஓட்டும் பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஜெஸிகா கோம்ப்ஸ். 

அவ்வப்போது அதி வேகமாக காரை ஓட்டி சாதனைகள் நிகழ்த் வரும் ஜெஸிகா கோம்ப்ஸ் 2013ம் ஆண்டு 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.

இந்நிலையில் அந்தச் சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தென்மேற்கு ஓரேகான் பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியதில் ஜெஸிகா உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் வாகனங்களில் செல்பவர்களுக்கு அதிவேகமாக செல்ல வேண்டாம் என அறிவுரை கூறிவிட்டு மற்றொரு பக்கம் விமானத்திற்கு பயன்படுத்தப்படம் எஞ்சினை கொடுத்து காரை ஓட்டி சாதனை படைப்பத எதற்காக? பரலோகம் செல்லவா? இதுபோன்ற சம்பவங்களால் சாதனை முயற்சி என்ற பெயரில் பல பேர் தங்களது இன்னுயிரை மாய்த்துள்ளனர்.

வாழ்வதற்கு பிறந்தோமோ சாதிக்க பிறந்தாமோ என ஜெஸிகா கோம்ப்ஸ் யோசித்து இருந்தால் காலண்டரில் அவருடைய மரண தேதி தள்ளிப் போய் இருக்கும்.