பிரசவ வார்டில் மனைவி! வலியால் துடிப்பு! கையில் பதாகைகளுடன் கணவன் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் ஜார்ஜியாவை சேர்ந்த கெண்டல் கேவர் காதலிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை புத்தக வடிவில் கதையாக தொகுத்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியிடம் காண்பித்துள்ளார் கணவர் ஒருவர்.


அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பிறக்க இருக்கும் தருவாயில் அந்த புத்தகத்தை கணவர் வாசித்தது பார்வையாளர்களுக்கு கண்ணீரையும் ஆனந்தத்தையும் வரவழைக்கிறது.

4 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சுமார் 1 லட்சம் பேர் இந்த ஷேர் செய்துள்ளனர். 60 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 10 ஆயிரம் பேர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவை பார்க்கும் பலபேர் நமக்கு இது தோணாம போச்சே என்று புலம்பித் தள்ளுகின்றனர்.

அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் முதல் பக்கத்தில் 'மூச்சு விடு' என்று தொடங்குகிறது. இரண்டாவது பக்கத்தில் “நாம் முதல் முதலாக எப்போது சந்தித்தோம் என்பதை உன்னால் நினைவு கூற முடியுமா?” என்று கேட்கிறார். அடுத்தடுத்த பக்கங்கள் இந்த ஜோடியின் மகிழ்ச்சியான மற்றும் காதல் நேரங்களை பட்டியலிடுகிறது.

இது குறித்து சில பெண்கள் கூறும்போது பிரசவ நேரத்தில் இதுபோன்ற அனுபவம் இனிமையான ஊக்கமளிக்கும் என்றும் சூப்பர் சிந்தனை என்றும் கூறியுள்ளார். இன்னொரு பெண் கடவுளே என்ன ஒரு அற்புதம், அழகாகவும் இதயப்பூர்வமாகவும் இருக்கிறது. நான் இங்கே கண்ணீருடன் அமர்ந்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

காதல் மனைவிக்கு காதல் கதை சொல்லி உற்சாகம் ஊட்டிய கெண்டல் கேவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்