ஒரு இந்து பெண்ணும்! ஒரு முஸ்லீம் இளம் பெண்ணும்! உலகம் முழுவதும் வைரல்! காரணம் இது தான்!

அமெரிக்காவில் இளம் பெண்கள் இருவர் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் தற்போது உலகம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் நியுயார்க் நகரில் செட்டில் ஆனவர் அஞ்சலி சக்ரா. இதே போல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்று வசித்து வருபவர் சுந்தாஸ் மாலிக்.

இவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள். தன்பால் ஈர்ப்பால் காதலில் விழுந்த அஞ்சலியும் – மாலிக்கும் தற்போது ஒன்றாக வசித்து வருகின்றனர் . விரைவில் இவர்கள் இருவரும் அமெரிக்க சட்டப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு நியுயார்க் நகரில் மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் அஞ்சலி – மாலிக் ஜோடி திருமண போட்டோ சூட் நடத்தியுள்ளது. அப்போது இருவரும் சிரித்து மகிழ்வது போன்ற போஸ் போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதே போல் அஞ்சலியும் – மாலிக்கும் உதட்டு முத்தம் பகிர்ந்து கொள்வது போன்ற புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை புகைப்பட கலைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்க்க மிகவும் அழகாக இருக்கும் காரணத்தினலும் இந்துப் பெண்ணும் முஸ்லீம் பெண்ணும் காதலில் விழுந்துள்ளதால் இந்த புகைப்படங்கள் தற்போது வரை 50 ஆயிரம் லைக்குகளை அள்ளியுள்ளது.