அமெரிக்காவில் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தில் தனது குழந்தையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மீதான கோபத்தில் குழந்தையை சுட்ட கணவன்..! - அமெரிக்க அதிர்ச்சி

அமெரிக்காவின் மிச்சிகன் வாகனத்தில் மைக்கேல் கிறிஸ்டோபர் கிளான்ஸ் என்பவர் தனது மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் தனது குழந்தையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆத்திரம் அடைந்த மனைவி தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி காரில் ஏறி சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் துப்பாக்கியை எடுத்து அவர்கள் செல்லும் காரை நோக்கிச் சுட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு குழந்தையின் முகத்தில் ஒரு புறமாகபட்டது. இதையறிந்த மைக்கேல் உடனே அப்பகுதியை விட்டு தப்பித்து ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் முகம் சிதைந்து போய்விட்டது இதற்கு அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனே குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை அளிக்குமாறு மருத்துமனையில் சேர்த்த அவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு தலைமறைவாக உள்ள அவரது கணவர் கிறிஸ்டோபர் என்பவரை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி கைது செய்யப்பட்டார்.
சுமார் 27 நாட்கள் குழந்தையை மருத்துவமனையில் வைத்து பல அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று குழந்தையின் தாயிடம் தெரிவித்துள்ளனர்.
எங்களின் குழந்தையின் சிகிச்சைக்காக போதிய அளவு பணம் இல்லாததால் அவரது மனைவி சமூக ஆர்வலர்களை நாடியுள்ளார் இந்நிலையில் குழந்தையின் மருத்துவ செலவிற்காக சுமார் 60,000 பவுண்டுகள் தற்போதுவரை பொதுமக்களிடம் கிடைத்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.