இறந்த இதயத்தை மீண்டும் துடிக்க வைத்த மருத்துவர்கள்..! ஒரு உயிரை காப்பாற்ற நடைபெற்ற மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது நன்கொடையாக பெறப்பட்ட இதயத்தை செயல்படவைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


வடகரோலினா மாகாணத்தில் உடலுறுப்பு தானம் மூலம் மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் நன்கொடையாக பெறப்பட்டது. அந்த இதயம் டியுக் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர்களால் கொண்டு வரப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பையில் துடிக்கும் இதயத்தை பாதுகாப்பாக கொண்டு வரும் வீடியோவை அறுவை சிகிச்சை நிபுணர் ஜேக்கப் நியால் ஷ்ரோடர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து பத்திரமாக எடுக்கப்பட்ட இதயம் இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொறுத்தப்பட்டு செயல்பட வைக்கப்பட்டது. பொதுவாக இதயம் எடுக்கப்பட்ட பின்னர் 8 மணிநேரம் வரை துடிக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது.

இது குறித்து முதுநிலை மருத்துவர்கள் இதயத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்கொடையாளர்கள் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவித்தனர். தற்போது புதிய இதயம் பொறுத்தப்பட்ட நோயாளி நலமுடன் இருக்கிறார்.