பிரதமருடன் தகாத உறவு..! வெளியான தகவல்களால்அமெரிக்கப் பெண்மணி அதிர்ச்சி!

லண்டன்: பிரிட்டன் பிரதமருடன் முறைகேடான தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவதால் அமெரிக்க பெண் தொழிலதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் ஆர்குரி. தொழிலதிபரான இவர், பிரிட்டன் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சனுடன் முறைகேடான தொடர்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மாநகர மேயராக போரிஸ் ஜான்சன் இருந்தபோது ஜெனிஃபர் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஜெனிஃபர் வேதனை தெரிவித்துள்ளார்.  

பிரிட்டனைச் சேர்ந்த ITV-க்கு பேட்டி அளித்துள்ள ஜெனிஃபர் ஆர்குரி, ''போரிஸ் ஜான்சனுடன் நான் நெருங்கிப் பழகி வந்தேன். அதனை அவர் எதோ செக்ஸ் தேவைக்காக ஏற்பட்ட உறவு போலவும், மது விடுதியில் நடனமாடும் பெண் கூட பழகுவது போலவும் தற்போது என்னை அவர் புறக்கணிக்க தொடங்கியுள்ளார். காரியம் முடிந்ததும் கழட்டிவிடும் அவரது மனப்பான்மை எனக்கு மிக வேதனை அளிக்கிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

ஒரு புனிதமான உறவுக்காக பழகிய என்னை கீழ்த்தரமான நபர் போல அவர் சித்தரிப்பது மிகவும் ஆத்திரமூட்டுகிறது. என்னுடன் பேசுவதையே அவர் நிறுத்திவிட்டார். நான் வெறும் செக்ஸ் உறவுக்காக அவருடன் பழகவில்லை. இதை ஏன் அவர் புரிந்துகொள்ள மறுக்கிறார் என புரியவில்லை,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

பிரிட்டனில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் பற்றி வெளியாகியுள்ள இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.