வெளிநாட்டினருடன் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து! டிரைவர் போட்ட சடன் பிரேக்! தலை குப்புற கவிழ்ந்ததால் 4 பேர் பலி!

அமெரிக்காவில் சீனாவைச் சேர்ந்த பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டபோது பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரைஸ் கென்யான் பூங்காவிற்கு 29 சீன சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 சீன பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 15 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பேருந்து வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்துவிட்டதாக உயிர் தப்பிய டிரைவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.