அமெரிக்காவின் பிளாக் ஸ்டோன் நிறுவனம் - இந்தியாவின், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வாங்குகிறது!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளாக்ஸ்டோன் நிறுவனம்.


நிதிச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பெரிய நிறுவன முதலீட்டாளராக உருவெடுத்து வருகிறது , நாட்டில் உள்ள ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்திய முழுவதும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 75 ஆயிரத்து 826 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளதாகவும்.

மேலும் இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எம்பசி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்தியாவில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி வருவதாக கூறப்படுகிறது. சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு பின்புறம் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது..

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும். இந்தியாபுல்ஸ் நிறுவனத்தை. கடன் இல்லாத நிறுவனமாக கொண்டுவருவதற்கும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் திட்டமிட்டுள்ளது. 

2019-20 நிதியாண்டில் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்டின் மொத்த நிகர கடன் ரூ .4,590 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வெளியேறி நிதி சேவைகளில் கவனம் செலுத்த இந்தியாபுல்ஸ் குழுமத்தின் திட்டமிட்டுள்ளது,

இதன் ஒரு பகுதியாக லட்சுமி விலாஸ் வங்கியை கையகப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நிதி. ரியல் எஸ்டேட். ஃபார்மா. கட்டுமானம். கட்டுமான பொருட்கள். எல்ஈடி பல்புகள் போன்ற வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.

மணியன் கலியமூர்த்தி.